நவாஸ் செரீப்பை விடுவிக்கக்கூடாது – புலனாய்வுத்துறை நிர்ப்பந்தம்!

Monday, July 23rd, 2018

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பின் விடுதலைக்கு இடமளிக்க கூடாதென பாகிஸ்தான் புலனாய்வுத்துறை தம்மை நிர்ப்பந்திப்பதாக பாகிஸ்தானின் மேல்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் பொதுத் தேர்தலுக்கு முன்னர் நவாஸ் செரீப்பும் அவரது மகளும் விடுவிக்கப்படக் கூடாதென்றும், நவாஸ் செரீப்பின் மேன்முறையீட்டில் அவருக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்படக் கூடாதென்றும் பாகிஸ்தான் புலனாய்வுப்பிரிவினர் நிர்ப்பந்தித்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையின் மீது சவால்விடுத்து ஊடகத்துறையையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு பாகிஸ்தான் புலனாய்வு பிரிவு முயற்சிப்பதாக குறித்த நீதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: