நற்மதிப்பு தகர்ந்துவிட்டது! – கண்ணீர் விட்ட பியூஷ்!!

Friday, July 22nd, 2016

சேலம் முள்வாடி பகுதியில் பாலம் கட்டும் பணிகளை தடுத்து ஆர்ப்பாட்டம் செய்ததாக கைது செய்யப்பட்ட சூழலியல் செயற்பாட்டாளரும், சேலம் மக்கள் குழு ஒருங்கிணைப்பாளருமான பியூஷ் மனுஷ் ஜாமீனில் நேற்று விடுவிக்கப்பட்டார்.

சேலத்தில் மக்களிடம் முறையாக நோட்டீஸ் வழங்காமல் முள்வாடி பகுதியில் பாலம் கட்டும் பணிகளை மேற்கொண்டதாக கூறி சேலம் மக்கள் குழு மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பியூஷ் மனுஷ் மற்றும்  கார்த்திக், முத்து ஆகியோரை கடந்த ஜூலை 8 ந்தேதி கைது செய்தார்கள் சேலம் போலீஸார்.

மற்றவர்களுக்கு கடந்த ஜூலை 14 அன்று பிணை வழங்கப்பட்ட நிலையில் பியூஷிற்கு பிணை வழங்க காவல்துறை கடுமையான ஆட்சேபம் தெரிவித்ததால், பிணை மறுக்கப்பட்டுவிட்டது.

இதனிடையே நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்த பியூஷ் மனுஷின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம்,  அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து சட்ட சம்பிரதாயங்கள் முடிந்து நேற்று பிற்பகலில் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். சேலம் மத்திய சிறையில் இருந்து அவரை நண்பர்கள் உறவினர்கள் மற்றும் சேலம் மக்கள் குழு உறுப்பினர்கள் வரவேற்று அழைத்துச்சென்றனர்.

அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “சிறைக்குள் 30 காவலர்கள் சேர்ந்து என்னை அடித்தார்கள். இந்திய சிறைகள் மீது நற்மதிப்பு இருந்தது. அது தகர்ந்துவிட்டது” என்றார்.

Related posts: