நம்பிக்கையை இழந்த விமானியின் கடைசி நிமிட பேச்சு !

Friday, December 2nd, 2016

கொலாம்பிய விமான விபத்தின் போது விமானி பேசிய கடைசி இறுதி நிமிடங்களின் ஓடியோ தற்போது வெளியாகியுள்ளது.

கொலம்பியாவில் விமான விபத்தில் இதுவரை 76 பேர் பலியாகியுள்ளனர், விபத்துக்கு காரணம் எரிபொருள் தீர்ந்தது தான் என கூறப்பட்டு வந்தது. தற்போது அதை நிரூபிக்கும் வகையில் விமானத்தை இயக்கிய Miquel என்பவர் விமானத்தில் அப்போது நடந்ததை விமான கட்டுபாட்டு அறைக்கு தெரிவித்தது தொடர்பான ஓடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அதில், அவர் விமான கட்டுபாட்டு அறையில் இருக்கும் ஒரு பெண்ணிடம், விமானத்தில் எரி பொருள் தீர்ந்து விட்டது என்றும் உடனடியாக LAMIA 2933 என்ற இடத்தில் தரையிரக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதற்கு கட்டுபாட்டு அறையில் சரி நீங்கள் செல்லுங்கள் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தான் தெரிவிப்பதாக கூறுகிறார்.

மேலும் விமானி தாங்கள் தற்போது 9000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருப்பதாகவும், தங்களுடன் எப்போதும் இணைப்பிலே இருக்கும்படி கூறியுள்ளார், அவர்களும் சரி என கூறியுள்ளார்.

இன்னும் LAMIA 2933 எவ்வளவு தூரம் உள்ளது என்று விமானி கேட்க அதற்கு கட்டுப்பாட்டு அறையில் இன்னும் 8.2 மைல்களே உள்ளது என்றவுடன் அவர் நம்பிக்கையை இழந்து “ஓ ஜீசஸ்” என கூறி முடிவடையும் ஓடியோ கேட்போரை கண்கலங்க வைத்துள்ளது.

625.0.560.320.500.400.194.800.668.160.90

Related posts: