நம்பகத்தன்மை பிரச்சினையில் சாம்சங் நிறுவனம்!

Wednesday, October 12th, 2016

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.அதன் கலக்ஸி நோட் 7 வகை மொபைல் தொலைபேசியிலுள்ள பட்டரி வெடித்துத் சிதறியதை அடுத்து, சந்தையிலிருந்து 25 லட்சம் தொலைபேசிகள் திரும்பப் பெறப்பட்டன.

ஆனால் மாற்றிக்கொடுக்கப்பட்ட தொலைபேசியிலும் அதே பிரச்சனை. இதையடுத்து தனது அதிநவீன தொலைபேசியான கலக்ஸி நோட் 7 தயாரிப்பை முற்றாக நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டது சாம்சங்.

ஆனால் அதன் போட்டியாளரான ஆப்பிள் நிறுவனமோ கமுக்கமாக உள்ளது. இப்பிரச்சனை குறித்து ஆப்பிள் இதுவரை எக்கருத்தையும் வெளியிடவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் சாம்சங்கின் நம்பகத்தன்மை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என தொழில்சார் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

p04bq8pw

Related posts: