நட்டஈடு வழங்கும் சுவிஸ்சர்லாந்து!

images Tuesday, March 13th, 2018

அரசியல் அந்தஸ்த்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவருக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் நட்டஈட்டை வழங்கியுள்ளதாக சுவிட்சர்லாந்தின் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த தமிழ் ஏதிலியின், அரசியல் தஞ்சக் கோரிக்கைக்கான விண்ணப்பத்தை சுவிட்சர்லாந்தின் அதிகாரிகள் நிராகரித்து, அவரை நாடுகடத்தினர்.

மீண்டும் சுவிட்சர்லாந்து சென்ற அவர், நாடுகடத்தலின் பின்னர் தாம் இலங்கையில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்து, நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருந்தார்.

இதன்படி அவருக்கு நட்டஈட்டை வழங்க குறித்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மைக்காலமாக சுவிட்சர்லாந்தின் இலங்கை ஏதிலிகளின் அரசியல் அந்தஸ்த்து விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.