நடைமுறைக்கு வந்தது 6 நாடுகளுக்கான பயணத்தடை !

ஆறு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாத வண்ணம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் விதிக்கப்பட்ட பயணத் தடை உத்தரவு பகுதியளவில் அமுலுக்கு வந்துள்ளது.
குறித்த பயணத் தடை உத்தரவின் படி லிபியாஇ ஈரான்இ சிரியா சோமாலியா சூடான் மற்றும் யெமென் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாது எனவும் அமெரிக்காவுக்கு செல்ல முற்படும் அகதிகள் தடை செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வதிவிடம் பெறும் பொருட்டு விண்ணப்பிப்போர் அங்கு நெருங்கிய உறவினர்களை அல்லது வணிக பிணைப்புகளை கொண்டிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில் தாத்தா பாட்டி அத்தை மாமா மைத்துனர் மற்றும் மருமகள் ஆகியோர் அமெரிக்காவில் வசித்தாலும் அது செல்லுபடியாகும் விண்ணப்பமாகக் கருதப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|