நடுவானில் சிறிய விமானங்கள் மோதல் : 5 பேர் பலி!
Thursday, September 1st, 2016
அமெரிக்காவில் நடுவானில் இரண்டு குட்டி விமானங்கள் மோதிக் கொண்ட விபத்தில் அதில் பயணம் செய்த 5 பேரும் பலியானார்கள்.
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் நடுவானில் பறந்த 2 குட்டி விமானங்கள் மோதிக் கொண்டன. இதனால் அவை கீழே விழுந்து நொறுங்கின. பெத்தேலுக்கு வடக்கே 60 மைல்கள் தொலைவில் நேற்று இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து பற்றித் தகவல் அறிந்ததும், மருத்துவர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டரில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால், ஒருவரும் உயிர்பிழைக்கவில்லை. இரண்டு விமானங்களிலும் பயணம் செய்த 5 பேரும் பலியாகினர்.
அமெரிக்காவில் நடுவானில் விமானங்கள் மோதிக் கொள்ளும் சம்பவம் நடப்பது மிக அரிது. எனவே, இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விசாரணை நடத்துவதற்காக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் சார்பில் மூன்று அதிகாரிகள் மற்றும் பேரிடர் மீட்பு வல்லுநர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தரப்பிலும் விசாரணை நடத்தப்படுவதாக அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|