நடுக்கடலில் தத்தளித்த 200 அகதிகள் ஸ்பெயினில் மீட்பு!
Tuesday, July 31st, 2018
மத்திய தரைக்கடல் பகுதியில் தத்தளித்த 200-க்கும் மேற்பட்ட அகதிகளை ஸ்பெயின் கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
வடக்கு ஆப்ரிக்கா பகுதியிலிருந்து மத்திய தரைக்கடல் பகுதி வழியாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக நுழைய முயன்றவர்களை கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர்.
நீரில் மூழ்கக்கூடிய ஆபத்தான நிலையில் மொத்தம் 21 படகுகளில் வந்த 200-க்கும் மேற்பட்டோர் ஜிப்ரால்டர் நீரிணைப் பகுதியில் காவல் படையினரால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு பாதுகாப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
பிரான்ஸ் தாக்குதல்! 3 மாதங்கள் அவசர நிலை பிரகடனம்!
இஸ்ரேல் காட்டுத்தீ : சந்தேகத்தின் பேரில் 12 பேரை கைது!
பொலிசார் பயணம் செய்த விமானம் மாயம்!
|
|