நகர பகுதிகளில் துப்பாக்கிக்கு தடை –  கனேடிய மக்கள் கோரிக்கை!

Tuesday, December 5th, 2017

கனடாவில் செய்தி ஊடகம் ஒன்று பொது மக்களிடம் நகர பகுதிகளில் துப்பாக்கி உபயோகத்திற்கு தடை விதிப்பது தொடர்பாக கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. அதில் அதிகபட்ச மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்

கனடாவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருவதால், Ekos Research Associates எனும் கனட செய்தி நிறுவனம், தொலைபேசி வாயிலாக பொதுமக்களிடம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது

கடந்த மாதம் 10 முதல் 30ஆம் திகதி வரை நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பு சுமார் 2,287 கனடிய மக்களிடம் நடத்தப்பட்டது. அதில் கனடாவின், நகர பகுதிகளில் துப்பாக்கி உபயோகிப்பதற்கு தடை விதிப்பதற்கும், அதில் உள்ள நிறைகள் மற்றும் குறைகள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டது

அந்த கேள்விகளுக்கு, 69 சதவீத மக்கள் தடை விதிக்க சம்மதம் தெரிவிப்பதாக பதிலளித்திருந்தனர். அதிகபட்சமாக Quebec மாகாணத்தில் 76 சதவீத மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர் Alberta மாகாணத்தில் குறைந்தபட்சமாக 48 சதவீத வாக்குகள் பதிவானது. சில அரசியல் கட்சிகளும் இந்த கருத்துக் கணிப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்

இதனைத் தொடர்ந்து கனட அரசு, துப்பாக்கி மற்றும் கடுமையான ஆயுதங்களை நகர பகுதிகளில் பயன்படுத்த தடை விதிக்கும் சட்ட வரைவுகளை விரைவில் கொண்டுவர உள்ளதாக அறிவித்துள்ளது

Related posts: