தோல்வி அடையாத கலைஞர்!

திமுக தலைவர் கருணாநிதி அவர்கள், சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.
1957ம் ஆண்டு சுயேச்சையாகவும் மற்ற அனைத்து தேர்தலிலும் திமுக வேட்பாளராகவும் போட்டியிட்டார்.
1984ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இந்தியாவிலேயே இது வரை தோல்வி பெறாத ஒரு தலைவர் என்பது இவரது பலம்.
இதன் மூலம், தமிழக சட்டமன்றத்துக்கு தொடர்ந்து 13வது முறையாக கருணாநிதி தேர்வு. இந்த ஆண்டு தேர்தலில், திருவாரூரில் இவரை எதிர்த்து போட்டியிட்ட, அதிமுக வேட்பாளரை விட 68587 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 12 தேர்தலை விட இந்த முறை அதிக வாக்கு வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
அமெரிக்கா மீது பொருளாதார தடை - லெபனான் வெளியுறவு அமைச்சர்!
படகு விபத்தில் 19 பேர் பலி 25 பேர் மாயம்!
மாயமான மலேசிய விமானத்தில் அவிழாத மர்மம் - உறவுகள் ஆவேசம்!
|
|