தொழுகையின் போது துப்பாக்கி சூடு – இலண்டனில் சம்பவம்!

Thursday, May 23rd, 2019

கிழக்கு இலண்டன் பகுதியில் உள்ள மசூதிக்கு வெளியே துப்பாக்கிசூடு நடத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இங்கிலாந்தின் Ilford பகுதியில் உள்ள the Seven Kings மசூதிக்கு வெளியே மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் 28 வயதுள்ள இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், அந்த மர்ம நபர் முகத்தை மூடியபடி மசூதிக்குள் நுழைய முயன்றார்.

அங்கிருந்தவர்கள் அவரை துரத்தியதும் வெளியில் வந்து துப்பாக்கியால் சுட்டார் என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts: