தொழில் பூங்காவுக்குள் நுழைந்து சரமாரி துப்பாக்கி சூடு..! ஒருவர் பலி,!

Saturday, April 10th, 2021

அமெரிக்கா – டெக்ஸாஸ் மாகாணத்தில் ஆயுததாரி ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் காயமடைந்துள்ளர்.

இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய ஆயுததாரி அங்கிருந்து தப்பி ஓடியிருக்கின்றார். மத்திய டெக்ஸாஸ் பகுதியில் உள்ள தொழில்பூங்காவில்

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். புதன்கிழமையன்று கரோலினாவில் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் ஒருவர்

மருத்துவர் மற்றும் தமது குடும்பத்தினர் உட்பட 6 பேரை சுட்டுக் கொன்ற பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

Related posts: