தொடருந்து விபத்து: காங்கோவில் 33 பேர் பலி!

625.500.560.350.160.300.053.800.900.160.90 Monday, November 13th, 2017

ஆபிரிக்க நாடான காங்கோவில் எரிபொருள் ஏற்றிச்சென்ற தொடருந்தொன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் பலியாகியுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

லுபும்லாஷி நகரில் இருந்து லுயினா நகருக்கு எரிபொருளை ஏற்றிய 13 பெட்டிகளில் கொண்ட தொடருந்தொன்று பயணித்துள்ளது. இந்த சரக்கு தொடருந்தில் பொதுமக்களும் சட்டவிரோதமாக பயணித்துள்ளனர். குறித்த தொடரூந்து மலை சிகரம் ஒன்றின் ஊடாக பயணித்த போது தடம்புரண்டுள்ளது.

இந்த விபத்தில் 33 பலியானதாக அந்தநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. றித்த தொடரூந்து சரக்கு ஏற்றிச் செல்லும் தொடரூந்து என்பதால் அதில் பயணித்த அனைவரும் சட்டவிரோத பயணம் செய்ததாகவே கருதப்படுவதாக காங்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


அமெரிக்கா - தென் கொரியா ராணுவ பயிற்சி:  ஆணு ஆயுதம் ஏவுவோம் என வடகொரியா எச்சரிக்கை!
திருமணத்துக்கு மறுத்த பெண்களுக்கு எதிராக ஆண்கள் பேரணி
புகலிடக்கோரிக்கையாளர்களால் 35 மில்லியன் வருமானம் !
60 குண்டுகள் முழங்க இராணுவ மரியாதையுடன் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்!
பிரித்தானியா விலகக் கூடாது