தைவான் அதிபரின் வேண்டுகோள்!

Sunday, June 5th, 2016

சீன அரசு, தன் நாட்டு மக்களுக்கு அதிக உரிமைகளை கொடுக்கவும், கடந்தகால காயங்களைக் குணமாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தைவானின் புதிய அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

பெய்ஜிங் தியன்ஆன்மென் சதுக்க படுகொலையின் 27வது ஆண்டு நினைவின்போது சாய் இங்வென் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஜனநாயக முறையிலான தேர்தல் மற்றும் மனித உரிமை பார்வைகளில் தைவான் சீனாவுக்கு எடுத்துக்காட்டாக விளங்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தியன்ஆன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற படுகொலையின் நினைவு சீனாவில் பெருமளவில் கண்டுகொள்ளப்படவில்லை.

தைவானின் புதிய அதிபரான சாய் இங்வென் தெரிவித்திருக்கும் இந்தக் கருத்து அவருக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்கெனவே இருக்கின்ற முறுகலான உறவை மேலும் மோசமாக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts: