தைவானில் நிலநடுக்கம்!

Monday, April 11th, 2016
தைவானின் வடக்கு கடலோரப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.5 அலகுகளாக பதிவாகியுள்ளது. இன்றைய நிலநடுக்கம் தலைநகர் தைபேயி உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இப்பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பெரும் பீதியடைந்தனர். இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் இதர சேதங்கள் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
கடந்த பிப்ரவரி மாதம் தைவானில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியானது நினைவிருக்கலாம்.

Related posts: