தேவையான மாற்றங்கள் நிகழாத வரை பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படாது – சிரேஷ்ட பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே சுட்டிக்காட்டு!

தேவையான மாற்றங்கள் நிகழாத வரை இலங்கையின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படாது என்று சிரேஷ்ட பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே தெரிவித்துள்ளார்
அமெரிக்காவின் ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஸ்டீவ் ஹான்கே, இலங்கையில் நிறுவன ரீதியிலான சீர்திருத்தங்கள் அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.
இல்லையெனில் கிடைக்கவுள்ள சர்வதேச நாணய நிதிய பிணையெடுப்பு, இலங்கையின் பொருளாதாரத்துக்கு உதவுவது சந்தேகமே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே நீண்ட கால கடன் நிலைத்தன்மையை அடைவதற்கான முயற்சியில், இலங்கையில் நிறுவன ரீதியிலான சீர்திருத்தங்கள் தேவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உயர் மட்ட அரசியலில் உள்ள பெரும்பாலான ஆளுமைகள் பல ஆண்டுகளாக இருந்ததைப் போலவே இன்றும் உள்ளனர். அவர்களிடம் மாற்றங்கள் ஏற்படவில்லை என்று ஊடகம் ஒன்றிடம் அவர் தெரிவித்துள்ளார்.
1965 முதல் 16 தடவைகளாக, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை இலங்கை பெற்றுக்கொண்டது.
எனினும் அவை அனைத்தும் தோல்வியடைந்தன. பிணை எடுப்பை எதிர்பார்ப்பது தற்காலிக நிவாரணத்தை மாத்திரமே கிடைக்கச்செய்யும்.
எனினும் நீண்ட காலத்திற்கு அது உதவாது என்றும் று சிரேஷ்ட பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|