தேவாலயத்தில் கொலைவெறி தாக்குதல்: அமெரிக்காவில் 27 பேர் பலி!

Monday, November 6th, 2017

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள San Antonio பகுதியில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் புகுந்து மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் அங்கிருந்த குழந்தைகள் உள்ளிட்ட 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட செய்திகள்  வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து விரைந்து வந்த பொலிசார், துப்பாக்கி சூடு நடத்திய நபர் மீது துப்பாகி சூடு நடத்தியுள்ளனர்.

இதில் அந்த நபர் கொல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது அப்பகுதியின் இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடந்தபோது குறித்த தேவாலயத்தில் சுமார் 50 பேர் பிரார்த்தனையில் கலந்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.தேவாலயத்தின் அருகாமையில் உறவினர்கள் அழுகுரலுடன் தகவலுக்காக காத்திருக்கின்றனர்.

வெளியான முதற்கட்ட தகவலின் அடிப்படையில் இதுவரை 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 24 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.முதலில் 16 பேர் கொல்லப்பட்டதாக தகவல் பரவியது, தற்போது 27 என தெரிய வந்துள்ளது.

மேலதிக தகவல்களை பொலிசார் பின்னர் வெளியிடுவதாக தெரிவித்துள்ளனர்.இதனைடையே ஜப்பானில் இருக்கும் ஜனாதிபதி டிரம்ப், குறித்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், நகர்வுகளை அக்கறையுடன் கணகாணித்து வருவதாகவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related posts: