தேவாலயத்தினுள் சரமாரி தாக்குதல் – பிரான்ஸ் மற்றொரு தாக்குதல் சம்பவம்!

Sunday, November 1st, 2020

பிரான்ஸ் – லயான் நகரத்தில் உள்ள தேவாலயத்தில் தீவிரவாத தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெவெளியிட்டுள்ளது.

குறித்த தேவாலயத்தில் கிரேக்க பாதிரியார் ஒருவரை அடையாளம் தெரியாத மர்ம நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான பாதிரியார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

துப்பாக்கிப் பிரயோகம் செய்தவரை நேரில் பார்த்தவர்கள் கூறிய அடையாளங்களை வைத்து பொலிஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய நபர் தப்பிச் சென்றதால் இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து தெளிவான தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பிரான்ஸ் நாட்டின் நிஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் மூன்று பேர் கழுத்து அறுத்து கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மீண்டும் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: