தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடவுள்ளது ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி

Wednesday, May 31st, 2017

பிரித்தானிய பொதுத் தேர்தலை முன்னிட்டு ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விஞ்ஞாபனத்தில் பொதுச் சேவைக்கென சுமார் 118 பில்லியன் பவுண்களை எஸ்.என்.பி. முதலீடு செய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்தின் நலன் கருதி பல விடயங்களில் முதலமைச்சர் நிக்கோலா அக்கறை செலுத்தியுள்ள போதிலும் இரண்டாவது கருத்துக்கணிப்பு தொடர்பிலேயே அவர் மிகுந்த ஈடுபாடு காட்டியுள்ளார் என தகவல்கள் குறிப்பிடுகின்றன.

குறித்த இரண்டாவது கருத்துக்கணிப்பு எதிர்வரும் ஆண்டு இலையுதிர்காலம் மற்றும்  2019ஆம் ஆண்டின் வசந்த காலத்திற்கு இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட வேண்டும் என நிக்கோலா வலியுறுத்தி வருகின்றார்.

இருப்பினும், குறித்த கருத்துக்கணிப்பு நடத்தப்படுவதற்கு பிரித்தானிய அரசாங்கத்தின் ஒப்புதல் அவசியமாகவுள்ள நிலையில் அவர் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும், ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் தொடர்பில் அக்கறை செலுத்த இது சரியான தருணம் அல்ல என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: