தேர்தல் முறைகேடுகள் – முறையிட Whatsapp இலக்கம் அறிமுகம்!

Tuesday, March 12th, 2019

தேர்தல் காலங்களில் இடம்பெறும் முறைகேடுகளை கருத்தில் கொண்டு, அவற்றினை தடுக்கும் விதமாக வாட்ஸ்ஆப் இலக்கம் ஒன்றினை இந்தியா தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள 94441 23456 என்ற வாட்ஸ்ஆப் இலக்கத்தின் ஊடாக முறைப்பாடுகளை பொது மக்கள் பதிவு செய்ய முடியும்.

இதன் ஊடாக தேர்தல் தொடர்பாக முறைப்பாடுகளை ஒளிப்படமாகவோ அல்லது வீடியோவாகவோ பதிவு செய்து, அதனை பொது மக்கள் ஆதாரங்களுடன் வாட்ஸ்ஆப் இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு செய்ய முடியும்.

தேர்தல் காலங்களில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குதல், தடையை மீறி சுவர் விளம்பரங்கள் செய்தல், கட்டுப்பாடுகள் மற்றும் நேரம் கடந்து பிரசாரம் செய்தல், அதிக சத்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துதல் போன்ற தேர்தல் விதிமுறை மீறல்கள் உள்ளிட்டவைகளின் ஊடாக முறைகேடுகளில் ஈடுபடும் நபர்கள் மீது தேர்தல் ஆணையம் சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.