தேர்தலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்கு தயார் – டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!
Tuesday, August 22nd, 20232020 ஆம் ஆண்டு தேர்தலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்கு தயார் என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் வியாழக்கிழமை ஜோர்ஜியாவில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவித்தார்.
ஜோர்ஜியா மாநிலத்தில் தம்மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை என டொனால்ட் ட்ரம்ப் முன்னதாக அறிவித்திருந்தார்.
கடந்த சில மாதங்களில் அவர் மீது சுமத்தப்பட்ட நான்காவது குற்றவியல் வழக்கு இதுவாகும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உட்பட மேலும் 18 பேர் குறித்த வழக்குகளில் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
இதன்படி, 19 குற்றவாளிகளுக்கும் எதிராக மொத்தமாக 41 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
Related posts:
ஏற்றுமதி இல்லாத அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது - அமைச்சர் ஹர்ஷ டி சில்வா!
வெளிநாட்டவர்கள் உயிரிழப்பது இலங்கையில் அதிகம் - நாடாளுமன்றில் தகவல்
தூரநோக்கு இல்லாததன் காரணமாகவே நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது - கோட்டாபய ராஜபக்ஸ!
|
|