தேநீரில் விஷம்: ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

Friday, August 21st, 2020

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சைபீரிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நவல்னி தற்போது கோமாவில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“அலெக்ஸி அருந்திய தேநீரில் விஷம் கலந்திருக்கலாம் என்று சந்தேகிகப்படுவதாக அவரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விஷம் வேண்டுமென்றே கொடுக்கப்பட்டது என்று தாம் நம்புவதாக அவர் மொஸ்கோ வானொலிக்கு தெரிவித்துள்ளார்

ஊழல் தடுப்பு பிரசாரகரான நவல்னி, ஜனாதிபதி விளாடிமிர் புட்டியின் கடுமையான விமர்சகர்களில் ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: