தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க கோரிக்கை!

Saturday, June 11th, 2016

கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா, கடந்த மார்ச் மாதம் லண்டனுக்குச் சென்றுவிட்டார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக, பிரித்தானிய அரசின் உதவியை இந்திய அரசு நாடியுள்ளது.

இந்நிலையில், விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிக்க வேண்டும் என்று பண மோசடித் தடுப்பு பிரிவு  சிறப்பு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தது.

இதுதொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் – மல்லையா மீது காசோலை மோசடி, பண மோசடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதால், கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக ஏற்கெனவே பிணையில் வரமுடியாத பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எங்களது கோரிக்கை மீது நீதிமன்றம், வரும் 13-ஆம் திகதி உத்தரவு பிறப்பிக்கலாம் எனத் தெரிகிறது என்று அந்த தெரிவித்துள்ளார்

Related posts: