தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமித்தார் ட்ரம்ப்!

Tuesday, February 21st, 2017

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக லெப்டினன்ட் ஜெனரல் எச்.ஆர் மெக்மாஸ்டர் (Lt Gen HR McMaster) என்பவரை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய மைக்கல் ஃபிளின் (Michael Flynn) பதவி விலகியதைத் தொடர்ந்தே குறித்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் தற்போது மெக்மாஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊழல் எதிர்ப்பு தொடர்பில் கடமையாற்றிய மெக்மாஸ்டர், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானில் பணி புரிந்து வந்தவர் என  தகவல்கள் குறிப்பிடுகின்றன.

குறித்த பதவிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் ஓய்வுபெற்ற துணை அட்மிரல் ரொபேர்ட் ஹர்வாட் முன்னதாக பரிந்துரைக்கப்பட்டிருந்த போதும், சில தனிப்பட்ட காரணங்களைக் காட்டி குறித்த கோரிக்கையை ரொபேர்ட் நிராகரித்ததை தொடர்ந்தே தற்போது மெக்மாஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

_94750659_07c9c626-0eeb-47a7-b0b4-e01d6d4deac0

Related posts: