தென் அமெரிக்காவுக்கான விஜயத்தை இரத்து செய்தார் டொனால்ட் ட்ரம்ப்!

Thursday, April 12th, 2018

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தென் அமெரிக்காவுக்கான முதலாவது அதிகாரபூர்வ விஜயத்தை இரத்துச் செய்துள்ளார்.

சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட சந்தேகத்திற்கிடமான இரசாயனத் தாக்குதல் குறித்து கவனம் செலுத்தியே அவர் இந்த விஜயத்தை இரத்துச் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் இடம்பெறவுள்ள அமெரிக்க உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக டொனால்ட் ட்ரம்ப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். எனினும், இறுதியில் அவர்பயணத்தை இரத்துச் செய்துள்ளார்.

சிரியா தொடர்பான அமெரிக்காவின் அவதானிப்பை வெளிப்படுத்தும் வகையில் அவர் வொஷிங்டனில் தங்கியிருப்பார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இந்த நிலையில், அவர் சார்பில் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

Related posts: