தென்னாபிரிக்க நெடுஞ்சாலை விபத்தில் 16 பேர் உடல் கருகிப் பலி!

Thursday, January 13th, 2022

தென்னாபிரிக்காவில் நெடுஞ்சாலை ஒன்றில் நடந்த வீதி விபத்தில் 16 பேர் உடல் கருகிப் பலியாகினர்.

லிம்போபோ பகுதியில் இந்தப் பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய பேருந்து(மினி பஸ்) ஒன்று காருடன் மோதியதில் பேருந்து தீப்பிடித்து வெடித்துச் சிதறியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் பேருந்தில் இருந்த 16 பயணிகள் உயிரிழந்ததாகவும்  மேலும் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

000

Related posts: