தென்கொரிய பொதுத் தேர்தல் – பெரும்பான்மையை இழந்தது ஆளுங்கட்சி

Thursday, April 14th, 2016

நடைபெற்றுமுடிந்த தென்கொரிய நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளிவந்த முடிவுளுக்கு அமைய ஜனாதிபதி பார்க் குவன் ஹையின் (Park Geun-hye) கட்சியான செனூரிக் வலதுசாரி கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் இதுவரை 85 சதவீதமானவை கணக்கிடப்பட்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தென்கொரிய நாடாளுமன்றத் தேர்தல் நேற்ற புதன்கிழமை நடைபெற்றது.

நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 300 ஆசனங்களுக்கு உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக நடத்தப்பட்ட இந்தத் தேர்தலில் ஆளும் செனூரிக் வலதுசாரி கட்சி 122 ஆசனங்களை வென்றுள்ளது.

இதேவேளை எதிர்க்கட்சியான மின்ஜு கட்சி (Minjoo Party) 123 ஆசனங்களை வென்று ஜனாதிபதி பார்க் குவன் ஹையின் கனவை கலைத்துள்ளது.

கடந்தமுறை இடம்பெற்ற நாடாளுமனற்த் தேர்தலில் ஆளும் செனூரிக் வலதுசாரி கட்சி சிறிய பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: