துருக்கி பொலிஸ் நிலையத்தில் குண்டுவெடிப்பு: 8 பேர் பலி!

Friday, August 26th, 2016

துருக்கி காவல் நிலையத்தில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட கார்க்குண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 45 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

துருக்கியின் சிஸ்ரேவில் வன்முறையை அடக்கும் சிறப்பு படைப்பிரிவின் தலைமையகத்தை குறிவைத்து குர்திஷ் தொழிலாளர் கட்சியை சேர்ந்த பயங்கரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதலை நடத்திஉள்ளனர். தாக்குதல் நடத்தியதில் சிறப்பு படையின் தலைமையகம் பெரிதும் சேதம் அடைந்து விட்டது. வெடிகுண்டு வெடித்ததில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர். 45 பேர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் அங்கு நடைபெற்று வருகிறது.

கடந்த 2015-ஆம் ஆண்டு போர்நிறுத்தம் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து குர்திஷ் தொழிலாளர் கட்சியை சேர்ந்த பயங்கரவாதிகள் துருக்கி பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்திவருகின்றனர். இதனால் பாதுகாப்பு படையினர் உயிரிழப்பு மற்றும் காயம் அடைவது தொடர் சம்பவமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: