துருக்கி எல்லையில் தாக்குதல்:20 பேர் பலி!

Thursday, October 6th, 2016

சிரியாவுடனான துருக்கி எல்லையில், ஒரு தற்கொலை குண்டுதாரி, சிரிய கிளர்ச்சிப் போராளிகளின் தொடரணி மீது தாக்குதல் நடத்தியதில், குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சிரியாவின் நிலப்பரப்பிற்குள், ஆத்மே என்ற இடத்தில் உள்ள எல்லை கடக்கும் பகுதியில் இந்த குண்டு வெடிப்பு நடந்தது என்று பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சிரிய மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

துருக்கி ராணுவம் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு வழங்குகிறது. மேலும், இந்த பகுதியில் அவர்கள் சமீபமாக இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பினருக்கு எதிராக ஒரு தாக்குதலில் ஈடுபட்டனர்.இந்த தாக்குதலை தாங்கள் தான் நடத்தியதாக ஐ.எஸ்.அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

_91542315_syria

Related posts: