துருக்கியில் இங்கிலாந்து, ஜெர்மனி தூதரகங்களுக்கு எதிராக சதி!

Saturday, September 17th, 2016

துருக்கியில் உள்ள இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி தூதரகங்களுக்கு எதிராக சதி செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் அவர்களுக்கும், எந்தவொரு பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு இல்லை என துருக்கி அரசின் ‘அனடோலு ஏஜென்சி’ தெரிவித்துள்ளது.

அந்த தூதரகங்களுக்கு எதிராக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான உளவு தகவலை அடுத்தே போலீசார் நடவடிக்கையில் இறங்கியதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் அங்காராவிலும், ஒருவர் இஸ்தான்புல் நகரிலும் கைதாகினர்.

இதற்கிடையே அங்காராவில் உள்ள தனது தூதரகத்தை இங்கிலாந்து நேற்று மூடியது. பாதுகாப்பு காரணங்களால்தான் அந்த தூதரகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதே போன்று ஜெர்மனி தூதரகமும் நேற்று ஒரு நாள் குறிப்பிட்ட பணிகளுக்காக மட்டுமே தூதரகம் இயங்கும் என தனது இணையதளத்தில் அறிவித்தது. துருக்கியில் கடந்த ஓராண்டு காலமாக ஐ.எஸ். அமைப்பினரும், குர்து இன போராளிகளும் தாக்குதல்கள் நடத்தி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

thurukki Epdp news

Related posts: