துருக்கிப் பிரஜைகள் ஜெர்மனியில் உளவு பார்க்கப்படுவதனை ஏற்க முடியாது!
Thursday, March 30th, 2017ஜெர்மனிக்குள் வெளிநாட்டு உளவாளிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதிக்க முடியாது என ஜெர்மனிய அரசாங்கம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் வாழ்ந்து வரும் துருக்கிப் பிரஜைகள் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் கண்காணிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஜெர்மனியின் சட்ட திட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் வெளிநாட்டு உளவாளிகளுக்கு தேவையான வகையில் நடவடிக்கை எடுக்கப்படாது எனவும் ஜெர்மனிய உள்துறை அமைச்சர் Thomas de Maiziere தெரிவித்துள்ளார்.
Related posts:
அகமது கான் ரஹானியே நியூயோர்க் தாக்குதல்தாரி!
ஈராக்கில் தவறுதலாக நடத்தப்பட்ட தாக்குதலில் 63 பேர் பலி!
இணையசேவைகள் குழப்பம்!
|
|