துருக்கிக்கு எதிராக ஜெர்மனி நடாளுமன்றில் தீர்மானம்!

Friday, June 3rd, 2016

முதலாம் உலகப் போரின் போது துருக்கியின் ஒட்டோமென் படைப்பிரிவுகள் மேற்கொண்ட கொலைகள், இனப்படுகொலை என பிரகடனபடுத்தும் தீர்மானம் ஒன்றை ஜெர்மனி நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

இந்த தீர்மானத்திற்கு ஜெர்மனி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெறும்பான்மை வாக்குகள் கிடைத்துள்ளன. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்றரை மில்லியன் ஆர்மேனியர்களை துருக்கி திட்டமிட்டே கொலை செய்துள்ளதென ஆர்மேனியா தெரிவித்துள்ளது. இருப்பினும் இதனை மறுத்த துருக்கி, இதற்கு தமது கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.

ஜெர்மனின் இந்த தீர்மானம் இரண்டு நாடுகளின் உறவையும் மோசமான முறையில் பாதிக்கும் என்று துருக்கியின் அதிபர் எச்சரித்துள்ளார்.

Related posts: