துப்பாக்கி சூடு: மெக்சிகோவில் 4 பேர் பலி!

Monday, September 17th, 2018

மெக்சிகோவில் உள்ள சுற்றுலா தலத்தில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த சுற்றுலா தலத்திற்கு ஐந்து பேர் கொண்ட ஒரு குழு மோட்டார் சைக்கிளில் வந்து தாங்கள் கொண்டு வந்திருந்த துப்பாக்கிகளால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்த திடீர் தாக்குதலில் ஒரு பெண் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

தகவலறிந்து அங்கு சென்ற பொலிசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts: