துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு சத்திரசிகிச்சை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2022/11/download-1-2.jpg)
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கானுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவருக்கு நெருங்கியவர்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது நேற்று (03) துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டதுடன் வலது காலில் காயம் ஏற்பட்ட நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஐவர் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர் கைது செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
முன்கூட்டியே தேர்தலுக்கு தயாராகும் ஆஸ்திரேலிய!
பருவகால மாற்றத்தை சமாளிப்பதற்கான உலக ஒப்பந்தத்திற்கு சீனா ஒப்புதல்!
சர்வதேச நீதிமன்றத்திலிருந்து ரஷ்யா விலகுமா?
|
|