துப்பாக்கிச்சூடு – தீவிரவாதியின் புகைப்படத்தை வெளியிட்ட பிரான்ஸ் பொலிசார்!

Saturday, April 22nd, 2017

பிரான்சில் பொலிசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிரவாதியின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள Champs-Elysees பகுதியில் மர்மநபர் ஒருவர் ஒருவர் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் பொலிசார் ஒருவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியாகினார்.

இரண்டு பொலிசார் படுகாயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.துப்பாக்கிச் சுடு நடத்திய நபரை பொலிசார் அதே இடத்திலே சுட்டுத்தள்ளியதால், அவனும் இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில் இத்தாக்குதலில் ஈடுபட்ட நபரின் பெயர் Karim Cheurfi என்றும் அவருக்கு வயது 39 எனவும், அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவன் காரில் வந்து அதன் பின் துப்பாக்கியை வைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளான் எனவும் இத்தாக்குதலுக்கு இஸ்லாமிய அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இது ஒரு தீவிரவாத தாக்குதல் தான் என்று கூறப்படுகிறது. ஜனாதிபதி தேர்தல் முதல் சுற்று நடைபெற உள்ள நிலையில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts: