துபாய் நகரில் உலகின் மிக உயரமான சொகுசு ஹோட்டல் திறப்பு!

dubai hotel 2 Tuesday, February 13th, 2018

துபாயில் உலகின் மிக உயரமான சொகுசு ஹோட்டல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய் நகரம் உயரமான கட்டடங்களுக்குப் பெயர் பெற்றது.

விதவிதமாக வித்தியாசமான முறையில் கட்டடங்களை எழுப்பி அவர்களின் சாதனையை அவர்களே முறியடித்து வருகின்றனர். துபாயில் உலகின் மிக உயர்ந்த கட்டடமான ‘புர்ஜ்கலீபா’  828 மீட்டர் உயரம் உடையது.

உலகின் மிக உயரமான துபாயில் அமைக்கப்பட்ட கெவோரா சொகுசு ஹோட்டல் மொத்தம் 75 மாடிகளைக் கொண்டது. இது 356 மீட்டர் உயரம் உடையது.

உலகின் மிக உயரமான ஹோட்டல் என்ற அந்தஸ்தை துபாயின் மாரியட் மார்க்விஸ் என்ற நட்சத்திர ஹோட்டல் 355 மீட்டர் உயரத்துடன் பெற்றிருந்தது. தற்போது கெவோரா ஹோட்டல்அந்த பெருமையைத் தட்டிச் சென்றுள்ளது.