துபாய் இளவரசி எங்கே? தகவல் வெளியிட வலியுறுத்தல்!

Tuesday, May 8th, 2018

காணாமல் போன துபாய் இளவரசி எங்கே என்ற தகவலை வெளியிட வேண்டும் என்று அந்நாட்டு அதிகாரிகளை ஹ்யுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

எமிரேட்ஸ் ஆட்சியாளர் ஷெக் மொஹமத்பின் ராஷாத் அல் மக்டூமின் மகளான ஷெய்கா லத்தீபா சுதந்திரமான வாழ்க்கை வாழ வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றது.

ஆனால் லத்தீபா பயணம் செய்த ஆடம்பர படகு இந்தியா அருகே தடுத்து நிறுத்தப்பட்டு அவர் மீண்டும் துபாய் திருப்பி அனுப்பப்பட்டதாக நேரில் பார்த்த சிலர் கூறுகின்றனர். அப்போதில் இருந்தே அவரைக் காணவில்லை. சட்ட ரீதியான காரணங்களால் இதுகுறித்து கருத்துத் தெரிவிக்க முடியாது என்று துபாய் அதிகாரிகள் கூறினர்.

வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது பிடிபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. துபாய் அதிகாரிகள் அவரின் இருப்பிடத்தை வெளிப்படுத்தி அவரது சட்ட அந்தஸ்தை தெளிவுபடுத்த வேண்டும் என்று ஹ்யுமென் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது. அவர் எங்கு உள்ளார் என்பதை வெளிப்படுத்தவில்லை என்றால் அவர் நிர்ப்பந்தத்தின் பேரில் காணாமல் போயிருப்பதாகவே கருதப்படுமென அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தன் குடும்பத்தால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் இருந்து தப்பித்து செல்ல விரும்புவதாக லத்தீபா, தமது தோழிகளிடம் கூறியுள்ளார். அவர் காணாமல் போய் இரண்டு மாதங்களாவதால் அவர் பாதுகாப்பு குறித்த கவலை எழுந்துள்ளது.

Related posts: