துபாயில் தீவிபத்து;  15 மாடி கட்டிடம் சேதம்!

Monday, May 14th, 2018

துபாய் மரினா பகுதியில் உள்ள 15 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதுடன் தீயில் சிக்கிய அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

துபாயின் மரினா பகுதியில் சென் டவர் (Zen Tower) என்ற 15 மாடி கொண்ட குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இதில் தரைத் தளத்தில் ஓட்டல்கள், கிளினிக் உள்பட பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் இயங்கி வருகிறது.

நேற்று காலை சுமார் 10 மணியளவில் இந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள குடியிருப்பில் திடீரென்று தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கட்டிடத்தின் உள்ளே புகையால் மூச்சு திணறி உயிருக்கு போராடி கொண்டு இருந்தவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். தொடர்ந்து கட்டிடத்தில் சிக்கிய அனைவரையும் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: