தீ விபத்து – ஸ்தம்பிதம் அடைந்தது பாகிஸ்தான் பங்குச் சந்தை!

Tuesday, July 9th, 2024

பாகிஸ்தான் பங்குச் சந்தைக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக வர்த்தகம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கராச்சியில் அமைந்துள்ள பாகிஸ்தான் பங்குச் சந்தைக் கட்டடத்தின் நான்காவது மாடியிலேயே இன்று முற்பகல் குறித்த தீ விபத்து ஏற்பட்டது.

இந்நிலையில் பங்குச் சந்தை கட்டடத்தில் இருந்த அனைவரையும் மீட்புப் படையினர் பத்திரமாக வெளியே கொண்டு வந்துள்ளதோடு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 6 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ கட்டுப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார இணைப்பில்  ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே  இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

மேலும், இந்த விபத்து சம்பவத்தில் எவ்வித உயிர்சேதமும் ஏற்படவில்லை எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: