தீ விபத்தால் 20 இற்கும் மேற்பட்ட கடைகள் முற்றாக சேதம்!

Wednesday, August 17th, 2016

இந்தியாவில் சேலம் மாவட்டம் மேட்டூரில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20 இற்கும்  மேற்பட்ட கடைகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.

மேட்டூர் பிரதேசத்தில் அமைந்துள்ள நாளாந்த சந்தையில்  மீன் விற்பனைகடையொன்றில்  நள்ளிரவு  12 மணிக்கு தீ பற்றியுள்ளது.  குறித்த தீ அருகில் இருந்தகடைகள் மற்றும் வீடுகளுக்கும் தீ பரவியுள்ளது.

குறித்த தீயினால் 20 இற்கும் அதிகமான கடைகள் மற்றும் வீடுகள் தீ பற்றி எரிந்தமையால்  பலருக்கு  மூச்சித்திணறலும் ஏற்பட்டது. தீணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயிணை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். குறித்த தீ விபத்தில் 20 இலட்சத்திற்கும் அதிகமான பொருட்கள் சேதமடைந்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.


காணாமல் போன விமானம்: வீரரின் செல்போன் இயங்குகிறதா?
பெர்லின் தாக்குதல் திட்டம்: இஸ்லாமியவாத மதகுரு மீது குற்றச்சாட்டு!
10 அணுகுண்டுகளை சுமந்து செல்லும் சீனா:அமெரிக்கா அதிர்ச்சி!
ஆப்கானில் இருந்து துருப்பினர் திருப்பி அழைக்கப்பட மாட்டார்கள் - ட்ரம்ப்!
போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது நாமே - ஒப்புக் கொண்டது இஸ்ரேல்!