தீவிரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாக 16 வயது யுவதி உட்பட 4 பேர் பிரான்சில் கைது!

Saturday, February 11th, 2017

பிரான்சில் தீவிரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகத்தின்பேரில் 16 வயது யுவதி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரான்சில் கடந்த இரண்டு ஆண்டுகளான  அடுத்தடுத்து நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக  200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதன் காரணமாக அங்கு  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வகையில், தெற்கு பிரான்சின் மோன்ட்பெல்லியரில் சந்தேகப்படும்படியான நபர்கள் இருப்பதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த காவல்துறையினர்  16 வயது இளம்பெண் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேரும், வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் எளிதில் தீப்பற்றக்கூடிய, திரவத்தை வாங்கியதாகவும், இதன் முலம் வெடிபொருட்களை தயாரிக்க திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்த காவல்துறையினர்   தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 201702101745197666_16-year-old-girl-among-4-held-in-France-for-suspected-terror_SECVPF

Related posts: