தீவிரவாத குழுக்களுக்கு எதிராக உடன் நடவடிக்கை – அமெரிக்க வெளிவிவகார செயலாளர்!

Monday, October 30th, 2017

பாகிஸ்தானைத் தளமாக கொண்டிடயங்கும் தீவிரவாத குழுக்களுக்கு எதிராக உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஷன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பான வலியுறுத்தலை அவர் பாகிஸ்தானிடம் விடுத்துள்ளார்.தமது எதிர்ப்புக்களை பாகிஸ்தானிடம் பல முறை தாம் அறிவித்துள்ளதாக தெரிவித்த அவர், பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள தீவிரவாத குழுக்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.அத்துடன் பாகிஸ்தான் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறினால் தாம் வேறு வழிகளை கையாள வேண்டி வரும் எனவும் அமெரிக்க வெளிவிவகார செயலாளாளர் தெரிவித்தார்.

Related posts: