தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எகிப்தில் 12 படையினர் பலி!

Saturday, October 15th, 2016

எகிப்தின் சைனாய் தீபகற்பத்தில் உள்ள இராணுவ சோதனைசாவடி மீது இஸ்லாமியவாத தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுவர்கள் நடத்திய தாக்குதலில் 12 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெய்ர் அல்-அப்த் நகர் அருகே நடைபெற்ற இந்த தாக்குதலில் எட்டு படையினர் காயம் அடைந்துள்ளனர்.சைனாயில் சமீப நாட்களில் தீவிரவாத வன்முறை சம்பவங்கள் திடீரென அதிகரித்துள்ளன. இஸ்லாமிய அரசு என அழைத்து கொள்ளும் அமைப்பினருடன் தொடர்பில் உள்ள உள்ளூர் குழு ஒன்று தீவிரவாதிகளை வழிநடத்தி உள்ளது.

_91927364_011c2864-cc85-4286-96ed-46dabdc8d9b8

Related posts: