தீவிரவாதிகளுக்கு பிரித்தானியாவில் தனிச்சிறை!
Friday, July 7th, 2017
பிரித்தானியாவில் தீவிரவாதிகளை தனிச்சிறையில் அடைக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. பிரித்தானியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்ற வழக்குகளில் சிறைத்தண்டனை பெற்றுள்ள நபர்களுடனேயே அடைக்கப்படுவர். இதன்மூலம் மற்றவர்களுக்கும் தீவிரவாதிகள் தவறான தகவல்களை பரப்புவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தீவிரவாத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தனிச்சிறையில் அடைக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் சிறைத்துறை அமைச்சர் சாம் கியிமா தெரிவிக்கையில். முதற்கட்டமாக டர்ஹம் நகர் அருகேயுள்ள பிராங்க்லாண்ட் சிறையில் தீவிரவாத குற்றவாளிகளுக்கென்று தனிப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பிரிவுகளை மற்ற சிறைகளிலும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் மக்களிடம் சமூக விரோத கருத்துகளை பரப்பும் நபர்களை கண்காணித்து கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|