தீபாவின் அரசியல் ஆட்டம் ஆரம்பமா?

Wednesday, December 21st, 2016

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கும் அதிமுக கட்சியிலும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்வதில் சசிகலாவுக்கும் இளவரசிக்கும் போட்டி ஆரம்பமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மனைவிதான் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர்களில் ஒருவரான இந்த இளவரசி. இவா்தான் இன்று சசிகலாவுக்கு போட்டியாக உள்ளார்.

ஜெயலலிதாவின் பேரில் ஆந்திராவில் உள்ள திராட்சை தோட்டத்தை பார்த்துக் கொண்டவா்தான் இளவரசியின் கணவர் ஜெயராமன். அங்கு மின்சாரம் தாக்கி இறந்தார்.

இதனையடுத்து ஜெயராமனின் மனைவி இளவரசி மற்றும் இரண்டு மகள்கள், ஒரு மகன் ஆகியோரை போயஸ் கார்டனுக்கே அழைத்து வந்து பொருளாதார ரீதியாக பல்வேறு உதவிகள் செய்து அவர்களை பார்த்துக்கொண்டார்.

மட்டுமின்றி இளவரசியிடம் மிகவும் பாசத்துடனும் நடந்து கொண்டார். சசிகலாவுக்கு தன்னை தவிர வேறுநபா் ஜெயலலிதாவிடம் நெருக்கமாக இருப்பது பிடிக்காது. இதனால் மனகசப்புடன் சசியும், இளவரசியும் போயஸ் தோட்டத்தில் இருந்து வந்தனா்.

கடந்த 2012 ஆம் ஆண்டு சசிகலா உள்ளிட்ட அனைவரையும் போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றினார் ஜெயலலிதா. ஆனால் இளவரசியை மட்டும் வெளியேற்றவில்லை.

இளவரசியின் பெயரில் சிறுதாவூா் பங்களா உள்ளிட்ட பல கோடி சொத்துக்கள் உள்ளது. இளவரசியின் மூத்த மகளுக்கு ஜெயலலிதாவே திருமணம் செய்து வைத்தார்.

எப்படி பட்ட வில்லாதி வில்லன்களை எல்லாம் கார்டனை விட்டு வெளியே அனுப்பிய சசிகலாவுக்கு இளவரசியை மட்டும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இதில் தற்போதும் ஆந்திராவில் உள்ள திராட்சை தோட்டம் உள்ளிட்ட பல சொத்துக்களுக்காக இருவருக்கும் இடையே கார்டனில் அடிக்கடி சண்டை மூண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இளவரசி நன்றாக படித்தவா். ஜெயா டிவியின் இயக்குனராகவும் உள்ளார். இளவரசிதான், சசிகலாவுக்கு அடுத்து என்கிற நிலை வரவேண்டும் என்று ஆசைப்படுகிறாராம்.

இதில் ஏதேனும் சசிகலா கொடைச்சல் கொடுத்தால் அவா் தீபாவின் பக்கம் தாவவும் தயாராக உள்ளாராம். இதனால் சசிகலாவே இளவரசியிடம் அமைதிகாத்து வருவதாக கார்டன் வட்டார செவி வழி தகவல்கள் தெரிவிக்கின்றன. சசிகலாவையும் அடக்கி ஆளும் ஒரு பெண் இளவரசி என்று கூறுகின்றனா்.

deepa-161216-seithyindia

Related posts: