திட்டமிட்டுள்ள சிரியா போர்நிறுத்தம் சிக்கலாகும் நிலை!

Monday, September 12th, 2016

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட சிரியாவில் மேற்கொள்ளப்படும் போர்நிறுத்தம், பிரித்தானிய நேரப்படி பிற்பகல் 4.45 மணிக்கு அமுலுக்கு வருகிறது.

அங்குள்ள பலவிதமான கிளர்ச்சிக் குழுக்களின் சிக்கல் நிறைந்த கூட்டணிகளால் இந்தப் போர்நிறுத்த திட்டம் பிரச்சினை ஆவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. சிரிய இராணுவத்துடன் மோதிக்கொண்டிருக்கும் சில குழுக்கள், இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இணைத்துக் கொள்ளப்படாத தங்களது வேறு சில கூட்டாளிக் குழுக்களிடமிருந்து பிரிய விரும்பாது என்றும், இந்தக் கூட்டாளிக்குழுக்களில் சில அல் கயீதா அமைப்புடன் தொடர்புடையவை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மிகவும் செல்வாக்குமிக்க இஸ்லாமியவாத கிளர்ச்சிக் குழுவான அஹ்ரார் அல்-ஷாம் இந்த போர்நிறுத்த உடன்பாட்டை முற்றிலும் நிராகரித்துள்ளது. அலெப்போ மற்றும் இட்லிப் மாகாணங்களில் ஞாயிற்றுக்கிழமையும் சிரியா மற்றும் ரஷ்யாவின் விமானத் தாக்குதல்கள் தொடர்ந்தன.

160911103335_kerry_lavrov_us_russia_syria_ceasefire_624x351_reuters_nocredit

Related posts: