திடீரென மாயமான அல்ஜீரியா விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது!

அல்ஜீரியா அல்ஜியர்ஸ் நகரில் இருந்து மார்செய்லே என்ற இடத்துக்கு போயிங் 737-600 ரக பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது.அதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். இந்த நிலையில் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமான நிறுவனத்தின் “ரேடார்” கட்டுப்பாட்டில் இருந்து அந்த விமானம் திடீரென மாயமானது.
இதனால் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. அந்த விமானம் எங்கோ விழுந்து நொறுங்கி விபத்துக் குள்ளானதாக கருதப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் அது விபத்துக்குள்ளாகவில்லை என அறிவிக்கப்பட்டது.தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமானம் புறப்பட்ட 30 நிமிடத்தில் மீண்டும் அல்ஜியர்ஸ் விமான நிலையத்திலேயே பத்திரமாக தரை இறக்கப்பட்டது. இச்சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
Related posts:
உடைந்த பாகங்களை தேட மடகாஸ்கர் செல்லும் பயணியரின் உறவினர்கள்!
பிஜி நாட்டில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
இஸ்ரேல் - ஹமாஸின் பரஸ்பர ரொக்கெட் தாக்குதல்களால் இதுவரை 70 க்கும் மேற்பட்டோர் பலி!
|
|