திடீரென துப்பாக்கிச் சூட்டு:அமெரிக்க இராணுவ விமான தளம் மூடப்பட்டது!

இனந் தெரியாத நபரால் திடீரென மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டால் வோஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் இராணுவ விமான தளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன..
வோஷிங்டன் நகரத்தில் இருந்து 32 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருக்கும் ஆண்ட்ரூஸ் விமான தளத்தில் இன்று துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இனந் தெரியாத நபரொருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
குறித்த தகவலை ஆண்ட்ரூஸ் விமான தள டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. மேலும் துப்பாக்கி சூடு காரணமாக விமான தளம் தற்காலிகமாக மூடப்பட்டு, பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆண்ட்ரூஸ் விமான தளத்தில் தான் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் அதிகாரபூர்வ விமானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related posts:
|
|