திடீரென தீப்பிடித்து எரிந்த விமானம்!

147636638380165 Tuesday, June 12th, 2018

ஜேர்மனில் Frankfurt விமான நிலையத்தில் நின்ற விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
Philadelphia செல்வதற்காக விமானநிலையத்தில் நின்ற லுப்தான்சா விமானத்திலேயே திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் விமான ஊழியர்கள் இரண்டு பேர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 10 பேரின் சுவாசக்குழாய் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிபத்து ஏற்படும்போது பயணிகள் யாரும் விமானத்தில் இல்லை. இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.