தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

தாய்வான் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் 2000க்கும் அதிகமானோர் படுகாயம்அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாய்வான் நாட்டின் வட கிழக்கு கடற்கரை பகுதியில் 6.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடற்கரை நகரமான ஹுவாலியனில் இருந்து வடக்கு திசையில் சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலும் கடலுக்கடியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
|
|